வெற்றிமாறன் - சிம்பு இணையும் ‘அரசன்’ படத்திலிருந்து விஜய் சேதுபதி திடீர் விலகல்

வெற்றிமாறன் - சிம்பு இணையும் ‘அரசன்’ படத்திலிருந்து விஜய் சேதுபதி திடீர் விலகல்

1 mins read
99754c93-0a24-4950-86ff-90b0b49e0a26
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்புவுடன் நடித்த விஜய் சேதுபதி அப்படத்தில் இருந்து விலகினார். - படம்: சமயம்

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கும் ‘அரசன்’ திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு மதுரையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. தற்போது அடுத்தகட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் வில்லனாக நடிக்கவிருந்த நடிகர் விஜய் சேதுபதி படத்திலிருந்து விலகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குநர் மணிரத்னம் இயக்கும் புதிய திரைப்படத்திற்கு விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்திருப்பே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.

முன்னதாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ‘விடுதலை’ திரைப்படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்திருந்த விஜய் சேதுபதி, அப்படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களாகத் தொடர்ந்து நடைபெற்றது போல் இதற்கும் அதிக காலம் தேவைப்படுமோ என்ற தயக்கத்தின் காரணமாக விலகியதாகக் கூறப்படுகிறது.

சிம்பு - விஜய் சேதுபதி என இரு பெரும் நடிகர்கள் மோதும் காட்சிகளைக் காண ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு இந்தச் செய்தி சற்றே ஏமாற்றத்தை அளித்துள்ளது.

அவருக்குப் பதிலாகத் திரையுலகின் மற்றொரு முன்னணி நடிகர் வில்லன் கதாபாத்திரத்தில் ஒப்பந்தம் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் படக்குழுவினரால் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்