வெற்றி மாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பை கோவில்பட்டியில் நடத்தினர்.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக முன்பு தகவல் வெளியானது.
அவர் கௌரவ வேடத்தில் நடிக்கிறாரா, வில்லனா, அல்லது இரு கதாநாயகர்களில் ஒருவரா என்பன போன்ற விவரங்கள் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், அந்தப் படத்தில் இருந்து திடீரென விலகிவிட்டாராம் விஜய் சேதுபதி. காரணம், மணிரத்னம் இயக்கும் படத்துக்கு அவர் கால்ஷீட் ஒதுக்க வேண்டியுள்ளது. அதனால் வெற்றிமாறனிடம் தனக்குள்ள சிக்கலைக் கூறி, நட்புடன் விலகிவிட்டதாகத் தகவல்.
இதற்கு முன்பு ‘விடுதலை’ படத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. அந்தப் படம் பல மாதங்களுக்கு இழுத்தடிக்கப்பட்டதால் இப்போதும் அதேபோல் ஆகிவிடுமோ என்பதுதான் விஜய் சேதுபதியின் தயக்கத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
எனினும், விஜய் சேதுபதி விலகியது குறித்து வெற்றிமாறன் தரப்பிலிருந்து எந்தத் தகவலும் இல்லை. மேலும் மணிரத்னம் படத்துக்கான அறிவிப்புகூட இன்னும் வெளிவரவில்லை என்று ‘அரசன்’ படக்குழு தரப்பில் சுட்டிக்காட்டப்படுகிறது.

