விஜய் சார்தான் எனக்குப் பிடித்த கதாநாயகன்: பரவிய சமந்தாவின் பேச்சு

விஜய் சார்தான் எனக்குப் பிடித்த கதாநாயகன்: பரவிய சமந்தாவின் பேச்சு

காணொளிப் படம்: திங்க் மியூசிக் இந்தியா / யூடியூப்

09 Oct 2026 - 7:07 pm

1 mins read

அண்மைய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை சமந்தாவிடம், அவருக்குப் பிடித்த நடிகர் குறித்து கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், தனக்குப் பிடித்தமான கதாநாயகன் விஜய் என்று தெரிவித்துள்ளார்.

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா ரூத் பிரபு. இந்நிலையில், தனக்குப் பிடித்தமான கதாநாயகன் விஜய் என்று சமந்தா தெரிவித்துள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

விஜய்யுடன் இணைந்து நடித்த சமந்தா

தற்போது தமிழக முதல்வராக இருக்கும் விஜய்யுடன் சமந்தா இதுவரை ‘கத்தி’, ‘தெறி’, ‘மெர்சல்’ ஆகிய திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு வெளியான ‘கத்தி’ படத்தில் தொடங்கிய இவர்களது கூட்டணி, அட்லீ இயக்கத்தில் வெளியான ‘தெறி’ (2016), ‘மெர்சல்’ (2017) ஆகியவற்றிலும் தொடர்ந்தது.

விஜய்யின் எளிமை, படப்பிடிப்புத் தளத்தில் அவர் காட்டும் அர்ப்பணிப்பு, சக நடிகர்களிடம் பழகும் விதம் ஆகியவை குறித்து சமந்தா பாராட்டியதாகவும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திதிரையுலகம்திரைப்படம்சினிமாவிஜய்சமந்தா