‘கோட்’ இசை வெளியீட்டு விழாவில் விஜய் பங்கேற்காமல் போகலாம்

‘கோட்’ இசை வெளியீட்டு விழாவில் விஜய் பங்கேற்காமல் போகலாம்

1 mins read
0b60228e-28dc-4993-bab7-7cfbb142f2af
தாம் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழக அரசியல் கட்சியின் முதல் மாநாட்டுக்காக விஜய் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. - படம்: இணையம்

நடிகர் விஜய், திரையரங்குகளில் தமது கடைசித் திரைப்படத்தின் வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறார்.

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களத்தில் இறங்கவுள்ள இவர், திரைத்துறையிலிருந்து முன்கூட்டியே ஓய்வுபெற முடிவெடுத்துள்ளது பலரும் அறிந்ததே.

அந்த வகையில், விஜய்யின் நடிப்பில் வெளியாகவுள்ள ‘கோட்’ திரைப்படமே இவரது கடைசித் திரைப்படமாகும். வெங்கட் பிரபு இயக்கத்திலான இத்திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியீடு காண்கிறது.

இந்நிலையில், ‘கோட்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் படத்தின் ‘டிரெய்லர்’ வெளியீட்டிலும் விஜய் கலந்துகொள்ள மாட்டார் எனக் கூறும் செய்திகள் இணையத்தில் வலம் வருகின்றன.

விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழக அரசியல் கட்சியின் முதல் மாநாட்டுக்காக தயாராகி வருவதே அதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

‘கோட்’ படம் வெளியான பிறகு அதே செப்டம்பர் மாதம் திருச்சியில் தமது அரசியல் கட்சியை விஜய் அதிகாரபூர்வமாகத் தொடங்கப் போவதாகச் சொல்லப்படுகிறது.

திரைப்படக் குழுவினர் ஆகஸ்ட் மாதம் நடத்தக்கூடிய இசை வெளியீட்டு விழாவில் விஜய் பங்கேற்காமல் போகலாம் என தி கிளிட்ஸ் மீடியா ஊடகம் கூறியது. எனினும் அதுகுறித்த அதிகாரபூவத் தகவல் இன்னும் வெளிவரவில்லை.

குறிப்புச் சொற்கள்