விஜய் ரசிகர்கள் ‘ஜனநாயகன்’ படத்தின் வெளியீடு தள்ளிப்போனதால் சோகத்தில் உள்ளனர்.
இந்த நேரத்தில் விஜய் நடித்த ‘தெறி’ படத்தின் மறுவெளியீடு காணும் செய்தி அவர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.
ஏற்கெனவே பொங்கல் பண்டிகையையொட்டி இந்தப் படம் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியான நிலையில், சில காரணங்களால் அது தள்ளிப்போனது.
குறிப்பாக, அந்தச் சமயத்தில் பல குறைந்த செலவில் உருவான படங்கள் பாதிக்கப்படும் என்பதால் ‘தெறி’ மறுவெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில், பிப்ரவரி 20 அல்லது 27ஆம் தேதி படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன.
அநேகமாக இந்தச் செய்தியை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும்போது படம் வெளியாகி இருக்கக்கூடும்.
இதனிடையே, “சூர்யா நடிப்பில் முன்பு வெளியான ‘மௌனம் பேசியதே’ படத்தின் மறுவெளியீட்டுக்காக அப்படத்தின் நாயகி திரிஷா தானே பேசி ஒரு காணொளியை வெளியிட்டிருந்தார். அதே போல் ‘தெறி’ மறுவெளியீட்டுக்கு சமந்தாவும் காணொளி வெளியிடுவாரா?” என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

