விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்துக்கு ‘சிக்மா’ எனத் தலைப்பு வைத்துள்ளனர். படத்தின் சுவரொட்டியையும் வெளியிட்டுள்ளனர்.
சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு 95% முடிந்துவிட்டதாம்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். அதிரடியும் திகிலும் கலந்த படமாக உருவாகிறது.
முழு ஆக்ஷன் நாயகனாக சந்தீப் கிஷன் மிரட்டலாக நடித்துள்ளாராம்.
சமூகத்தால் சரியாகப் புரிந்துகொள்ளப்படாத ஒருவன் எப்படி நகர்கிறான், பின்னர் சாதிக்கிறான் என்பதுதான் கதையாம்.
லைகா நிறுவனத்துடன் இணைந்து ஜேசன் சஞ்சய்யும் இப்படத்தைத் தயாரிக்கிறார்.
“லைகா நிறுவனத்தின் ஆதரவு, சந்தீப் கிஷனின் திறமையான நடிப்பு, தமனின் இனிய இசை ஆகியவற்றின் துணையோடுதான் படத்தை திட்டமிட்டபடி முடிக்க முடிந்தது.
“இது பிரம்மாண்ட படைப்பாகவும் ரசிகர்களுக்கு மறக்கமுடியாத அனுபவத்தைத் தரக்கூடிய படமாகவும் அமையும்,” என்கிறார் ஜேசன் சஞ்சய்.
இன்னும் ஒரு பாடலை மட்டுமே படமாக்க வேண்டியுள்ளதாம். அதை முடித்துவிட்டால் படம் தயாராகிவிடும் என்கிறார்.

