ஹெச். வினோத் இயக்கிவரும் ‘ஜனநாயகன்’ படத்தில் விஜய் கதாபாத்திரத்தின் பெயர் ‘தளபதி வெற்றிகொண்டான்’ என்று ஒரு தகவல் வெளியாகி தீயாகப் பரவி வருகிறது.
அரசியல் கட்சித் தலைவரை வைத்து அரசியல் தொடர்பான படத்தை இயக்கி வருதிறார் வினோத். இந்நிலையில் ‘ஜனநாயகன்’ படத்தில் விஜய்யின் பெயர் ‘தளபதி வெற்றிகொண்டான்’ என்று கூறப்படுகிறது. மேலும் தன் பெயரைக் குறிக்கும் விதமாக படம் முழுவதும் கையில் ‘TVK’ என்று பச்சை குத்தி இருப்பாராம்.
TVK என்பது தமிழக வெற்றிக் கழகத்தை குறிப்பது ஆகும். ஆக தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாக இருக்கும் ‘ஜனநாயகன்’ படம் மூலமாக தமிழக வெற்றிக் கழகத்திற்கு விளம்பரம் தேடிக் கொடுக்கப் போகிறார்கள். ஆனால், ‘தளபதி வெற்றி கொண்டான்’ என்ற பெயர் நன்றாக இல்லையே என்று அவரின் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.