தனது இறுதிப் படத்திற்கு இறுதியாகப் பாடிய விஜய்

1 mins read
711813b8-a48e-4595-afa4-ba046fc83623
‘ஒன் லாஸ்ட் சாங்’ என்ற பாடலை பாடினார் விஜய். - படம்: ஊடகம்

நடிகர் விஜய் தன்னுடைய இறுதிப் படமாக விஜய் 69 படத்திற்காக ஒரு பாடலைப் பாடி இருக்கிறார்.

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 69வது படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள பையனூரில் தொடங்கப்பட்டுள்ளது. அங்கு அனிருத் இசையில் உருவாகியுள்ள ‘ஒன் லாஸ்ட் சாங்’ என்று தொடங்கும் பாடலுக்கு 500 நடனக் கலைஞர்களுடன் இணைந்து நடனமாடி இருக்கிறார் விஜய்.

இந்தப் பாடலை ஏற்கனவே விஜய்க்காக ‘நான் ரெடிதான்’ என்ற பாடலை எழுதிய அசல் கோளார் எழுதி இருக்கிறார். இந்தப் பாடல் விஜய் 69வது படத்தின் ஓப்பனிங் பாடலாக அமைந்திருப்பதால் ரசிகர்கள் தியேட்டரில் எழுந்து ஆட்டம் போடக்கூடிய அளவுக்கு துள்ளலான இசையில் இசையமைத்து இருக்கிறார் அனிருத்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாவிஜய்