‘ஜனநாயகன்’ திரைப்படம் முழுநீள அரசியல் படமாக உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.
கதைப்படி, ஊழல்வாதிகளையும் தவறு செய்யும் அரசியல்வாதிகளையும் தட்டிக்கேட்கும் இளையராக நடித்துள்ளாராம் விஜய்.
இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பொதுமக்கள் வாக்களிப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டதாகத் தெரிகிறது.
தேர்தலின்போது வாக்களிக்க அரசியல்வாதிகள் மக்களுக்கு பணம் தருகிறார்கள். இது தொடர்பாக மோதல் வெடிக்கிறது. அப்போது விஜய் தலையிட்டு இருதரப்புக்கும் இடையே சமரசம் ஏற்படுவது போன்று இந்தக் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளனவாம்.