தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்கும் விஜய் யேசுதாஸ்

1 mins read
6da00130-f893-4ead-ba54-73c57f4f1f5a
மீண்டும் நடிக்கத் துவங்கி இருக்கும விஜய் யேசுதாஸ். - படம்: ஊடகம்

பழம்பெரும் பின்னணிப் பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ் மாரி படத்திற்குப் பிறகு மீண்டும் படத்தில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார்.

தனுஷ் நடித்த ‘மாரி’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தொடர்ந்து வில்லன் வாய்ப்புகள் வந்ததால் நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தார். சில ஆண்டுகளுக்கு பிறகு ‘படை வீரன்’ என்ற படத்தில் நாயகனாக நடித்தார். அந்தப் படம் பெரிதாக அவருக்கு உதவவில்லை. அதன் பிறகு ‘சாலமன்’ என்ற முப்பரிமான படத்தில் நடித்தார். பான் இந்தியா படமாக வெளியான இதுவும் சரியாக ஓடவில்லை.

இந்நிலையில் 7 ஆண்டுகளுக்கு பின் தற்போது ராம் இயக்கத்தில் ‘பறந்து போ’ படத்தில் நாயகன் மிர்ச்சி சிவாவின் நண்பராக நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்தப் படமாவது விஜய் யேசுதாசுக்கு நல்லதொரு இடத்தை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கிறது கோலிவுட்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாதிரைப்படம்