தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நயன்தாராவின் விஜயதசமி கொண்டாட்டம்

1 mins read
3e8e5544-5f2b-4b1b-b707-4a48ce556796
விஜயதசமி கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன். - படம்: ஊடகம்

நயன்தாரா தன் கணவர், பிள்ளைகளுடன் விஜயதசமி கொண்டாடிய புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் தற்போது ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், விஜயதசமி கொண்டாடிய நயன்தாரா தனது எக்ஸ் தளப் பதிவில், தாங்கள் கொண்டாடியது குறித்த படங்கள், காணொளிகளைப் பகிர்ந்துள்ளதோடு ரசிகர்களுக்கு விஜயதசமி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். படங்களை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகை