நடிகர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி அவர் நடித்த ‘கேப்டன் பிரபாகரன்’ ஆகஸ்ட் 22ஆம் தேதி மீண்டும் திரை அரங்குகளில் வெளியாகவுள்ளது.
‘கேப்டன் பிரபாகரன்’ படத்தைப் பிரம்மாண்டமாக மறுவெளியீடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி வசூலில் மாபெரும் சாதனை செய்த படமாக மாறியது ‘கேப்டன் பிரபாகரன்’.
இந்தப் படத்தை 34 வருடங்கள் கழித்து தற்போதைய 4கே தொழில்நுட்பத்தில் மின்னிலக்கமாக மாற்றப்பட்டு மறுவெளியீடு செய்யப்படவுள்ளது.
இப்படம் கிட்டத்தட்ட 500 திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் 1991 ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டில் வெளியான படம் ‘கேப்டன் பிரபாகரன்’.
விஜயகாந்திற்கு ‘கேப்டன்’ என்கிற பெயரைப் பெற்றுத் தந்தப் படம் இது.
சரத்குமார், ரூபிணி, ரம்யா கிருஷ்ணன், மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன், காந்திமதி உள்ளிட்ட பலர் ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில் நடித்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தப் படம் மீண்டும் வெளியாவதை அடுத்து, விஜயகாந்த் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.