தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாடல் வெற்றிக்கு விஜய் செய்யும் ‘மேஜிக்’கும் காரணம்: அனிருத்

1 mins read
e96a5e73-9bc5-4121-8361-b102b5f0c441
விஜய்யுடன் அனிருத். - படம்: ஊடகம்

‘ஜனநாயகன்’ படத்தின் பாடல்கள் சிறப்பாக உருவாகி இருப்பதாக இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற ‘மதராஸி’ பட நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘கூலி’ படத்தை அடுத்து, தனது இசையில் அடுத்தடுத்து படங்கள் வெளியாவது உற்சாகம் அளிப்பதாகக் கூறியுள்ளார்.

“விஜய் படத்துக்காகப் பணியாற்றும்போது எப்போதுமே பாடல்கள் அருமையாக அமைந்துவிடும். பாடல் மட்டுமே அதன் வெற்றிக்கு காரணமல்ல. விஜய் திரையில் ஒரு ‘மேஜிக்’ செய்வார் அல்லவா? அதுதான் மிக முக்கியம்.

“செப்டம்பர் மாதம் ‘மதராஸி’ படம் வெளியாகிறது. அதன் பிறகு ஜனவரி மாதம் எனது இசையில் ‘ஜனநாயகன்’ வருவார். அப்போது மீண்டும் முழு பலத்துடன் வருவேன்,” என்றார் அனிருத்.

குறிப்புச் சொற்கள்