‘பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பது’ போல் ‘ஜனநாயகன்’ பட வெளியீடு தள்ளிப்போனாலும், விஜய் ரசிகர்களை ஆறுதல்படுத்தும் வகையில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘தெறி’ படம் இந்தப் பொங்கல் சமயத்தில் வெளியீடு காண உள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் அப்போது வசூலில் அசத்தியது. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அப்படத்தை மறுவெளியீடு செய்யத் திட்டமிட்டுள்ளார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு.
அதன்படி, பொங்கல் பண்டிகையன்று (ஜனவரி 15) ‘தெறி’ படம் வெளியாக உள்ளது.
அதுமட்டுமல்ல ‘தெறி’க்கு முன்பே விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ படமும் சனிக்கிழமை (ஜனவரி 10) தமிழகத்தில் சில பகுதிகளில் மட்டும் மறுவெளியீடு கண்டது.

