‘கோட்’ படத்தின் முதல்நாள் வசூல் ரூ.126 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
விஜய் நடித்துள்ள ‘கோட்’ திரைப்படம் தற்போது வெளியீடு கண்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தெரிய வந்துள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு மொழிகளில் இப்படத்தின் வசூல் ரூ.43 கோடி என்றும் தமிழகத்தில் மட்டும் ரூ.38.3 கோடி வசூல் கண்டுள்ளது என்றும் தயாரிப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், தெலுங்கில் ரூ.3 கோடி, இந்தியில் ரூ.1.7 கோடி வசூல் கண்டுள்ளது ‘கோட்’.
இப்படத்தின் மொத்த தயாரிப்புச் செலவு ரூ.400 கோடி என்று தகவல் வெளியான நிலையில் முதல்நாள் வசூல் ரூ.126 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ திரைப்படம் முதல்நாளில் உலகம் முழுவதும் ரூ.140 கோடி வசூல் கண்டு இருந்தது.