நடிகராக மாறும் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்

1 mins read
2d9fb55f-18a0-4aa4-ad42-2c4c0770f437
ஜேசன் சஞ்சய். - படம்: ஊடகம்

‘சிக்மா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்.

இறுதிகட்டப் படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில், இப்படத்தில் இடம்பெறும் சிறப்புப் பாடலுக்காக நடனமாடியுள்ளார் மெட்ராஸ் பட நாயகி கேத்தரின் தெரேசா.

இந்நிலையில், இதே பாடலில் அவருடன் ஜேசன் சஞ்சய்யும் நடனமாடி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், அடுத்தடுத்த படங்களில் அவர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்