விஜய் அரசியல் களத்தில் தீவிரம் காட்டிவரும் நிலையில், அவரது மகன் சஞ்சய் ஜோசஃப் தனது அறிமுகப் படத்தை சிறப்பான படைப்பாக உருவாக்குவதில் முனைப்பாக உள்ளார்.
இந்நிலையில், அவர் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.
இவரது முதல் படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.25 கோடி. இப்படத்தை பிரபல லைகா நிறுவனம் தயாரிக்கிறது. எனினும் முதல் பிரதி அடிப்படையில், சஞ்சய் ஜோசப்பின் புதிய நிறுவனம்தான் தயாரித்துக் கொடுக்கிறது.
இதன் மூலம் தனது முதல் படத்திலேயே இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார் சஞ்சய் ஜோசஃப்.

