முடங்கியது விஜய் மகன் இயக்கும் படம்

1 mins read
a1fa9ab9-871f-4d91-8bf2-032ce1509f5f
லைகா நிறுவனத் தலைவர் சுபாஷ் கரண், ஜேசன் சஞ்சய். - படம்: ஊடகம்

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. பணப் பிரச்சினைதான் காரணம் என்கிறார்கள்.

இந்தப் படத்தை லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்கிறது. அதாவது, படத்தை ரூ.25 கோடிக்குள் முழுமையாக எடுத்து முடித்து, தயாரிப்பு நிறுவனத்திடம் முதல் பிரதியை ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் ஒப்பந்தம்.

ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய சுதந்திர தினத்தையொட்டி, இப்படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியாகும் எனக் கூறப்பட்டது. ஆனால், அதுகுறித்து எந்தத் தகவலும் இல்லை, முன்னோட்டத்தையும் காணவில்லை.

இந்நிலையில், படத்தின் இறுதிக்காட்சியைப் படமாக்கும் முன்பே லைகா நிறுவனம் கொடுத்த தொகையை முடித்துவிட்டாராம் ஜேசன் சஞ்சய். அதனால்தான் படப்பிடிப்பை நிறுத்திவிட்டதாகத் தகவல்.

லைகா நிறுவனத்தார் இதுவரை எடுத்த பகுதிககளைத் திரையிட்டுப் பார்த்த பின்னர், நியாயமாகத் தொகை செலவிடப்பட்டிருப்பது தெரிய வந்தால், மேற்கொண்டு பட்ஜெட்டை அதிகப்படுத்த முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்