தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘தங்கலான்’ படக்குழுவினருக்கு விருந்து வைத்த விக்ரம்

1 mins read
f7a1873d-0671-44c2-9e81-ff796942112b
படக்குழுவினருக்கு விருந்து பரிமாறும் நடிகர் விக்ரம். - படங்கள்: ஊடகம்

பா.இரஞ்சித் இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடிப்பில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவந்த ‘தங்கலான்’ படத்தில் விக்ரம் சிறப்பாக நடித்திருந்தார்.

கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் இப்படம் இதுவரை உலகளவில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

முக்கியமாக, தெலுங்கிலும் இப்படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) இந்தியிலும் இப்படம் வெளியாக உள்ளதால், இவ்வாண்டின் சிறந்த படங்களில் ஒன்றாக ‘தங்கலான்’ இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்தச்சூழலில், படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் நடிகர் விக்ரம் படக்குழுவினருக்கு விருந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

இந்தப் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் கவனம் ஈர்த்து வருகின்றன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்