அறிமுக இயக்குநருடன் கைகோத்துள்ளார் விக்ரம் பிரபு.
இவரது நடிப்பில் கடைசியாக வெளியான `டாணாகாரன்’ படம் வசூல், விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. எனினும், அதன் பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் எந்தப் படமும் வெளியாகவில்லை.
இந்நிலையில், ‘நோட்டா’ பட இயக்குநர் ஆனந்த் சங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சண்முகப்பிரியன் இயக்கத்தில் நாயகனாக நடிக்கிறார் விக்ரம் பிரபு. இதற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘இவன் வேற மாதிரி’, ‘அரிமா நம்பி’ ஆகிய படங்களின் வரிசையில் இதுவும் வெற்றிப்படமாக அமையும் என நம்புகிறாராம் விக்ரம் பிரபு.