தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விக்ரம் பிரபு நடிக்கும் புதுப்படம்

1 mins read
0ebd686a-7bde-409b-a4b2-6036b2aaa32b
விக்ரம் பிரபு. - படம்: ஊடகம்

‘இறுகப்பற்று’ படத்தை அடுத்து, விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகும் புதிய படத்தை அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்குகிறார். இவர் வெற்றி மாறனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

லலித்குமார் தயாரிக்கும் இப்படத்தில் அவரது மகன் அக்‌ஷய் குமாரும் இன்னொரு நாயகனாக அறிமுகமாகிறார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.

உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் கதையை ‘டாணாக்காரன்’ படப் புகழ் இயக்குநர் தமிழ் எழுதியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, மாதேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

படப்பூசையுடன் படப்பிடிப்பையும் சென்னையில் தொடங்கி உள்ளனர். படத்தில் பங்களிக்கும் மற்ற கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்