தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

துருவ நட்சத்திரத்திற்காகக் காத்திருக்கும் விக்ரம்

1 mins read
3ead6815-05a6-4890-afed-5bf66f44a75a
‘துருவ நட்சத்திரம்’ படத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சி. - படம்: ஊடகம்

‘துருவ நட்சத்திரம்’ படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருப்பதாக நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி, 8 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியாகாமல் இருக்கும் படம் துருவ நட்சத்திரம்.

அப்படம் தயாரிப்பாளர்களுக்கு இடையே நீடித்துவரும் நிதி பிரச்னையால் இன்னும் திரைக்கு வராமல் இருக்கிறது.

இந்நிலையில், திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘வீர தீர சூரன்’ படத்தை ரசிகர்கள் எவ்வாறு ரசிக்கின்றனர் என்பதை அறிய திரையரங்கு ஒன்றிற்கு விக்ரம் வந்தார்.

அப்போது, ‘துருவ நட்சத்திரம்’ படத்திற்காகக் காத்திருப்பதாக ரசிகர்கள் கூறியபோது, நானும் தான் என அவர் பதிலளித்தார்.

மேலும், அப்படம் எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு, இயக்குநரிடம் கேட்டுச் சொல்கிறேன் என அவர் கூறினார்.

பார்த்திபன், விநாயகன், சிம்ரன், ராதிகா, ரிது வர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படத்தை இவ்வாண்டு மே மாதம் திரைக்குக் கொண்டு வர கௌதம் மேனன் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்