மடோன் அஸ்வின் இயக்கும் விக்ரமின் 63வது படம்

1 mins read
6c2c8206-f0e4-4620-9963-3954ecdd71eb
விக்ரம். - படம்: ஊடகம்

விக்ரம் நடிக்கும் 63வது படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இப்படத்தை மடோன் அஸ்வின் இயக்குகிறார். இவர் ‘மண்டேலா’, ‘மாவீரன்’ ஆகிய படங்களை இயக்கியவர்.

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்க உள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட சுவரொட்டி மூலம் விக்ரம், மடோன் அஸ்வின் கூட்டணி உறுதியாகி உள்ளது.

தற்போது அருண் குமார் இயக்கத்தில் ‘வீர தீர சூரன்’ படத்தில் நடித்து வருகிறார் விக்ரம்.

குறிப்புச் சொற்கள்