தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திரைக்கு வரும் விக்ரமின் துருவ நட்சத்திரம்

1 mins read
2ba6f1fd-42d9-48d0-a9d3-d159429f81c4
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் (இடது), நடிகர் விக்ரம். - படங்கள்: ஊடகம்

கோடை வெளியீடாக ‘துருவ நட்சத்திரம்’ படம் திரைக்கு வரவுள்ளதாக அப்படத்தின் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார்.

விக்ரம் நடித்துள்ள இப்படத்தை என்டர்டெயின்மென்ட் நிறுவனம், எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தது. கடன் பிரச்சினையில் சிக்கி சில ஆண்டுகளாகத் திரைக்கு வராமல் இருக்கிறது.

இறுதியாக, கடந்தாண்டு ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவால் தேதி அறிவிக்கப்படாமல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தாண்டு கோடை வெளியீடாக இப்படம் திரைக்கு வரும் என கௌதம் மேனன் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்