‘சித்தா’ பட இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் ‘வீர தீர சூரன்’.
இது விக்ரம் நடிப்பில் உருவாகும் 62வது படம். இரண்டு பாகங்களாக உருவாகிறதாம்.
இரண்டாம் பாகம்தான் முதலில் வெளியாக உள்ளது. இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ், சித்திக், துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
மதுரையைக் கதைக்களமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் முதல்தோற்றச் சுவரொட்டியும் அறிமுக காணொளிகளும் நல்ல வரவேற்பைப் பெற்றன.
இந்நிலையில், டிசம்பர் 9ஆம் தேதி இப்படத்தின் குறு முன்னோட்டக் காட்சித்தொகுப்பு வெளியாகும் என்றும் படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் தேதி வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.
இதனால் விக்ரம் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.