உலகம் முழுவதும் பெருகி வரும் வன்முறையால் மனிதத்தன்மை அழிந்துவிடும் என்று நடிகை நிவேதா பெத்துராஜ் கவலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
அதில், தற்போது எந்த செய்தித் தளத்துக்குள் நுழைந்தாலும் கொலை, போர், கொடுமைப்படுத்தும் காட்சிகள் ஆகியவைதான் அதிகம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டி உள்ளார்.
“இந்த அளவு வன்முறை அதிகரிப்பது நல்லதல்ல. மனிதத்தன்மை முற்றிலுமாக அழிந்துபோன பிறகு புலம்பிப் பயனில்லை. செய்திகளை அறிந்துகொள்ள வேண்டுமானால் இனி வேறு வழிமுறைகள் தேவை,” என்று கூறியுள்ளார் நிவேதா பெத்துராஜ்.

