விஜய் வாய்ப்பை தட்டிப்பறித்த விஷால்

1 mins read
58cc8ffe-fc3e-4728-8678-eb2fe8791131
விஷால். - படம்: ஊடகம்

நடிகர் விஷால் அவ்வப்போது தனது ‘யூடியூப்’ ஒளிவழி மூலம் சில சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

அந்த வகையில், அவர் வெளியிட்ட தகவல் விஜய் ரசிகர்கள் மத்தியில் வேகமாகப் பரவி வருகிறது.

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் உருவான ‘சண்டக்கோழி’ படத்தில் விஷால்தான் நாயகன். விஜய்க்காக எழுதப்பட்ட கதையைத்தான் இந்தத் தலைப்பில் படமாக்க இருந்தார். லிங்குசாமியிடம் ஓர் அதிரடியான கதை இருப்பதை அறிந்த விஷால், உடனே கிளம்பிச் சென்று அவரை நேரில் சந்தித்துள்ளார்.

“நீங்கள் ஒரு கதை வைத்திருப்பதைக் கேள்விப்பட்டேன். அதை நாம் இருவரும் இணைந்து படமாக எடுப்போமா?” என்று விஷால் கேட்க, ‘அது நட்சத்திர நடிகருக்கான கதை’ என்று பதிலளித்துள்ளார் லிங்குசாமி.

“நானும் அவரை விடவில்லை. ‘இன்னும் 10 நாளில் நான் நடித்த ‘செல்லமே’ படம் வெளியாகும். அதை நீங்கள் பாருங்கள்’ என்று சொல்லிவிட்டு கிளம்பினேன். ‘செல்லமே’ படம் வெளியான பின்னர் அதைப் பார்த்த லிங்குசாமி, சற்று குழப்பமாகிவிட்டார். அவர் வைத்திருந்த அந்தக் கதை, பத்து படங்களுக்குச் சமமானது என்பது எனக்குத் தெரியும்.

“கடைசியில் லிங்குசாமி எனக்கு வாய்ப்பளிக்க, இருவரும் உற்சாகமாக ‘சண்டக்கோழி’ படத்தைத் தொடங்கினோம்,” என விஷால் கூறியிருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்