விஷாலின் ‘மகுடம்’ - 2026 கோடையில் வெளியீடு!

1 mins read
4d4045cc-c382-4437-bd39-75593890a9a2
‘மகுடம்’ படத்தில் விஷால். - படம்: தினமலர்
multi-img1 of 2

ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் விஷால் நடித்து வரும் ‘மகுடம்’ திரைப்படம், 2026 கோடை விடுமுறையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை ‘ஈட்டி’, ‘ஐங்கரன்’ படங்களை இயக்கிய ரவிஅரசு இயக்கி வந்த நிலையில் திடீரென்று அவருக்கும் விஷாலுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக ‘மகுடம்’ படத்தில் இருந்து ரவிஅரசு வெளியேறினார். அதனால் விஷாலே இயக்கி, மூன்று வேடங்களில் நடிக்கிறார்.

துஷாரா விஜயன் நாயகியாக நடிக்கும் இப்படத்தின் புதிய சுவரொட்டி புத்தாண்டை முன்னிட்டு வெளியானது. இந்தப் படம் கப்பல் துறைமுகத்தை சார்ந்த கதைக்களத்தில் உருவாகிறது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்