வெற்றிக்காகக் காத்திருக்கும் கவின்: வாழ்த்தும் சிம்ரன்

வெற்றிக்காகக் காத்திருக்கும் கவின்: வாழ்த்தும் சிம்ரன்

1 mins read
1932c8ab-ac7d-49d0-a7ef-742ea9792a30
கவின். - படம்: மாலை மலர்

தமிழ்த் திரையுலகில் தாம் இன்னும் பெரிய வெற்றியை எதிர்பார்த்து நம்பிக்கையுடன் காத்திருப்பதாகச் சொல்கிறார் நடிகர் கவின்.

கடந்த ஆண்டு இவரது நடிப்பில் ‘கிஸ்’, ‘மாஸ்க்’ ஆகிய இரு படங்கள் வெளியாயின. ஆனால் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில், கென் ராய்சன் இயக்கத்தில் கவினின் 9வது படம் உருவாகிறது. இதில் பிரியங்கா மோகன் நாயகியாகவும் நடன இயக்குநர் சாண்டி வில்லத்தனமான கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.

காதல், கற்பனை, நகைச்சுவை அம்சங்களுடன் உருவாகும் இந்தப் படத்தில் தற்போது சிம்ரனும் இணைந்துள்ளார்.

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு கதைத் தேர்வில் கூடுதல் கவனம் செலுத்தும் சிம்ரன், கவினின் 9வது படம் நல்ல கதைக்களத்துடன் உருவாவதால் நிச்சயம் வெற்றி பெறும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளாராம்.

குறிப்புச் சொற்கள்