சிறு வயதிலிருந்தே பேய்களை கதைக்களமாகக் கொண்டு உருவாகும் படங்கள் என்றால் அவற்றைப் பார்க்காமல் தவிர்த்துவிடுவாராம் நடிகர் மணிகண்டன்.
‘காலா’, ‘ஜெய்பீம்’, ‘சில்லு கருப்பட்டி’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் மணிகண்டன்.
‘குட்நைட்’, ‘லவ்வர்’, ‘குடும்பஸ்தன்’ படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார்.
அண்மைய பேட்டியில், தனது இயக்கத்தில் ஒரு பேய் படத்தை உருவாக்க விரும்புவதாகக் கூறியுள்ளார்.
“பேய் படங்களை திரையில் பார்த்தால்தான் பயம் வரும். படத்தை இயக்கும்போது பிரச்சினை இருக்காது.
“எல்லாரையும் பயமுறுத்திய ‘அன்னாபெல்’ படம் பார்க்கத் தெரியாமல் போய்விட்டேன். முழுப் படத்தையும் பார்த்துவிட்டு தூங்கவே முடியவில்லை.
“எனக்கு ஆன்மிகத்தில் நம்பிக்கை இல்லை. ஆனால் எழுத்தாளராக நான் பணியாற்றிய முதல் படம் ‘பீட்சா-2’. பேய் படங்களில் நடிக்க வேண்டும், அந்த மாதிரி படம் எடுக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது,” என்று கூறியுள்ளார் மணிகண்டன்.

