நாங்கள் தலைக்கனம் பிடித்தவர்கள் அல்லர்: பூஜா ஹெக்டே

நாங்கள் தலைக்கனம் பிடித்தவர்கள் அல்லர்: பூஜா ஹெக்டே

2 mins read
469299fe-c784-48f3-b1b3-586a66c64cbb
பூஜா ஹெக்டே. - படம்: பின்டர்ரஸ்ட்

டேவிட் தவான் இயக்கத்தில் வருண் தவான், மிருணாள் தாக்கூருடன் பூஜா ஹெக்டே நடித்துள்ள ‘ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை’ திரைப்படம் இம்மாதம் (ஜூன்) 5ஆம் தேதி வெளிவந்தது.

இதன் விளம்பர நிகழ்ச்சியில், ரசிகர் ஒருவருடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதற்கு விருப்பம் காட்டாமல் பூஜா கடந்துசென்ற காணொளி இணையத்தில் பரவி, கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது.

இதுகுறித்துச் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் விளக்கமளித்தார்.

“திரைத்துறையினருக்கு உயிர் கொடுப்பதே ரசிகர்கள்தான். சில நேரங்களில் அவசரமான சூழ்நிலை அல்லது அதிகக் கூட்ட நெரிசல் காரணமாக ரசிகர்களைக் கவனிக்க முடியாமல் போகலாம். அதற்காக நாங்கள் தலைக்கனம் பிடித்தவர்கள் என்று அர்த்தமன்று.

“ரசிகர்கள்தான் எங்களின் பலம்; எப்போதும் எங்களுக்குத் தெய்வங்கள் போன்றவர்கள் அவர்கள். எனவே, இந்தச் சம்பவத்தைத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்,” என்று பூஜா கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே, மற்றொரு நிகழ்ச்சியில் பேசிய அவர், தம்மீதான விமர்சனங்கள் குறித்தும் பகிர்ந்துகொண்டார்.

தமிழில் ‘முகமூடி’, ‘பீஸ்ட்’ படங்களைத் தொடர்ந்து, விஜய் ஜோடியாக அவர் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

தமது உடலமைப்புக் குறித்தும் பேசினார் பூஜா.

“ஒவ்வொருவருக்கும் என் மீது ஒரு புரிதல் இருக்கும். சிலருக்கு நடிப்பு, சிலருக்கு நடனம் பிடிக்கும்.

“ஆனால், எனக்கு என்னிடம் பிடித்த விஷயம் என் சிரிப்புதான். எந்தச் சூழலிலும் சோகத்தையும் வலியையும் காட்டாத என் சிரிப்புதான் எனது பலம், அடையாளம்,” என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் அவர் நடித்த ‘அல வைகுந்தபுரம்லோ’, ‘மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர்’ ஆகிய திரைப்படங்களுக்காகச் சிறந்த நடிகைக்கான SIIMA விருதுகளை அவர் வென்றுள்ளார்.

குறிப்புச் சொற்கள்