தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தனுஷைத் தலைமேல் வைத்துக் கொண்டாடலாம்: பார்த்திபன்

1 mins read
c68fae5e-6e2a-4fc1-aa53-0a737c87f217
பார்த்திபன், தனுஷ். - படம்: ஊடகம்

தனுஷைத் தலைமேல் வைத்துக் கொண்டாடலாம் என்று இயக்குநர் பார்த்திபன் தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

‘இட்லி கடை’ திரைப்படம் குறித்த அந்தப் பதிவில், தானும் ஒரு பாத்திரமாக அதுவும் கைதட்டல் வாங்கும் ஒரு கதாபாத்திரமாக அப்படத்தில் இடம்பெற்றதில் மகிழ்ச்சி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

டான் பிக்சர்ஸ் மற்றும் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து தயாரித்துள்ள படம் ‘இட்லி கடை’.

இதில் தனுஷ், நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன், சமுத்திரக்கனி, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தனுஷ் இயக்க இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் அக்டோபர் 1ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில், இந்தப் படம் குறித்து பார்த்திபன் வெகுவாகப் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

“இன்று அகிம்சை வெல்லும் என மகாத்மா காந்திகூட ஒரு திரைப்படம் எடுக்கத் தயங்குவார். காரணம் ரத்தம்தான் ‘பாக்ஸ் ஆஃபிசின்’ வண்ணமாக உள்ளது.

“பூவிற்குத் தன் வேரின் பெருமையைச் சொல்வது போல, பிள்ளைகளுக்குத் தங்கள் பெற்றோரையும் பூர்வீகத்தையும் குலதெய்வத்தையும் அடையாளப்படுத்தும் விதமாய் கதையைப் படைத்திருப்பது மெச்சத் தகுந்தது. கண்கலங்கியது பல இடங்களில். நண்பர் இளவரசு பாத்திரமாகவே பிரகாசித்தார்.

“இட்லியிலிருந்து வரும் ஆவி போல் ஜி.வி.பிரகாஷ் இசையைச் சுடச்சுட வழங்கியிருக்கிறார். தனுஷைத் தலைமேல் வைத்துக் கொண்டாடலாம்,” என்று தமது பதிவில் மேலும் தெரிவித்துள்ளார் பார்த்திபன்.

குறிப்புச் சொற்கள்