‘சில மாதங்களாகவே எனது சொந்த வாழ்க்கையில் காதல் கதை ஓடிக்கொண்டிருக்கிறது’ எனத் தெரிவித்துள்ளார் விஷால். நடிகர் விஷாலுக்கு 47 வயதாகியும் இன்னும் திருமணம் ஆகாமல் உள்ள நிலையில், விரைவில் அவருக்குத் திருமணம் நடக்க உள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரத்தினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், தற்போது திருமணம் குறித்த அறிவிப்பை விஷாலே வெளியிட்டுள்ளார்.
அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், “நடிகர் சங்கக் கட்டடத்தை கட்டி முடித்த பின்னர்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று உறுதியாக இருந்தேன். தற்போது நடிகர் சங்கக் கட்டடத்தைத் திறக்கத் திட்டமிட்டுள்ளோம்.
“வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு நடிகர் சங்கக் கட்டடத்தின் திறப்பு விழா நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.
“ஆகஸ்ட் 29ஆம் தேதி எனது பிறந்த நாள் என்பதால் அந்த நாளில் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவேன்.
“சில மாதங்களாகவே என் வாழ்வில் காதல் கதை ஓடிக் கொண்டிருக்கிறது. பெண் பார்த்து, பேசி முடித்து விட்டோம். இது ஒரு காதல் திருமணம்.
“விரைவில் மணப்பெண் குறித்த தகவலையும், திருமண தேதியையும் அறிவிப்பேன். பெரும்பாலும் செப்டம்பர் மாதத்தில் திருமணம் நடைபெறும்,” என்று தெரிவித்துள்ளார்.
இதனால், அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த 2004ல் நான் சினிமாவிற்கு வந்தேன். ‘செல்லமே’ படத்தில் நடிகராக அறிமுகமானேன். இப்போது 21 வருடங்கள் கடந்து விட்டது. மக்கள் தான் என்னுடைய சொத்து. அவர்கள் இல்லை என்றால் நான் இன்று நடிகராக இருந்திருக்க முடியாது என்றும் விஷால் கூறியுள்ளார்.