வாழ்க்கையில் அற்புதங்கள் நடக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கக் கூடாது என்று தனது சமூக வலைத்தளப் பதிவின் மூலம் ரசிகர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார் நடிகை தமன்னா.
இந்தி நடிகர் விஜய் வர்மாவும் இவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்துவிட்டதாக அண்மையில் ஒரு தகவல் வெளியானது.
இதையடுத்து, தமன்னா அற்புதங்கள் தொடர்பாக பதிவிட்டுள்ளது திரையுலக வட்டாரங்களில் பேசுபொருளாகி உள்ளது.
அந்தப் பதிவில், அற்புதங்கள் நிகழும் எனக் காத்திருப்பதைவிட, அவற்றை நாமே உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் தமன்னா.
இவர் தற்போது ‘ஒடேலா 2’ படத்தில் நடித்து வருகிறார். இது கடந்த 2022ஆம் ஆண்டு அசோக் தேஜா இயக்கத்தில் வெளியான ‘ஒடேலா ரயில்வே ஸ்டேஷன்’ படத்தின் இரண்டாம் பாகமாகும்.