அமெரிக்காவில் சுதந்திரமாக சுற்றித் திரிந்தோம்: ஐஸ்வர்யா

அமெரிக்காவில் சுதந்திரமாக சுற்றித் திரிந்தோம்: ஐஸ்வர்யா

1 mins read
787f016d-d739-4f4e-88a3-72a930cb1107
மனைவி, மகள்களுடன் ரஜினி. - படம்: ஹிந்துஸ்தான் டைம்ஸ்
Google News Preferred Icon

தன் தந்தை ரஜினியுடன் இணைந்து செலவிட்ட நாள்களை, இனிய அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினி.

சில ஆண்டுகளுக்கு முன்பு, இரு மகள்கள், மனைவியுடன் அமெரிக்கா சென்றிருந்தார் ரஜினி.

அமெரிக்காவில் பயணப் பெட்டிகளைத் தூக்குவது முதல் அனைத்தையும் நால்வரும் மட்டுமே கவனித்துக் கொண்டனராம்.

“அப்பாவுடன் சேர்ந்து அமெரிக்க வீதிகளில் ஒன்றாக நடந்துசென்றது பரவசமான அனுபவம். அங்கு அப்பாவுடன் ‘ஷாப்பிங்’ சென்றோம். பேருந்து, டாக்சிகளில் சுற்றினோம். வாங்கிய பொருள்களை அப்பா பொறுப்பில் விட்டுவிட்டு நாங்கள் ஜாலியாக ஊர் சுற்றினோம்.

“அந்த ஒரு மாதம் முழுவதும் நாங்களும் சாதாரணமான பொதுமக்கள் போல் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவித்தோம். அதையெல்லாம் என்னால் மறக்கவே முடியாது.

“அப்பா எந்தவிதமான பணிச்சுமையும் யோசனையும் இல்லாமல் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பது எங்களுக்கும் அளவுகடந்த உற்சாகம் தரும்,” என்று கூறியுள்ளார் ஐஸ்வர்யா.

குறிப்புச் சொற்கள்