தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சித்தார்த் நடிப்பில் உருவாகும் இணையத் தொடர்

1 mins read
13127316-0306-48e3-8cb8-6125d9877cd7
சித்தார்த். - படம்: ஊடகம்

தனக்கேற்ற கதாபாத்திரங்களைத் தேர்வு செய்வதில் சித்தார்த் எந்த வகையிலும் அவசரம் காட்டுவதில்லை.

கூடுமானவரை திரைக்கதை மட்டும் விறுவிறுப்பாக இருக்க வேண்டும் என்பதை தன் கோரிக்கையாக முன்வைக்கும் அவர், இயக்குநரின் எந்தப் பணியிலும் தலையிடுவதே இல்லையாம்.

இவரது நடிப்பில் கடைசியாக வெளியான ‘சித்தா’, ‘3 BHK’ ஆகிய இரு படங்களும் வசூலில் சாதித்தன. இதையடுத்து, இணையத் தொடர் ஒன்றிலும் நடித்து வருகிறார் சித்தார்த். இது ‘நெட்ஃபிளிக்ஸ்’ தளத்தில் வெளியாக உள்ளது.

அமெரிக்க எழுத்தாளர் ஒருவரது திரைக்கதையை அடிப்படையாக வைத்து ‘அன்அக்கஸ்டம்ட் எர்த்’ (Unaccustomed Earth) என்ற பெயரில் இந்தத் தொடர் தயாராகிறது.

மொத்தம் எட்டுப் பகுதிகளைக் கொண்ட இந்தக் காதல் கதையில், அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாம்.

மேலும், கலாசார ரீதியான தொடராகவும் இது முக்கியத்துவம் பெறும் என்கிறார் சித்தார்த்.

குறிப்புச் சொற்கள்