தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திருமண நாள் கொண்டாட்டம்: கிரிக்கெட் போட்டியைக் கண்டு ரசித்த அஜித், ஷாலினி

1 mins read
69bc469c-7235-45a1-b47d-1a9fe7f3e3b3
கிரிக்கெட் போட்டியைக் கண்டு ரசித்த அஜித் குடும்பத்தார், சிவகார்த்திகேயன். - படம்: ஊடகம்

நட்சத்திர தம்பதியரான அஜித்தும் ஷாலினியும் தங்களுடைய 25வது திருமண நாளை சிறப்பாகக் கொண்டாடினர். அது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி, பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

கடந்த 2000ஆம் ஆண்டில் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் காதல்

திருமணம் செய்துகொண்டனர்.

ஷாலினி அப்போது முன்னணி நாயகியாக இருந்தாலும், இனிமேல் சினிமாவில் நடிக்கப் போவதில்லை என அறிவித்தார்.

இந்நிலையில், அஜித், ஷாலினிக்குத் திருமணமாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இருவரும் இணைந்து கேக் வெட்டும் காட்சியுடன் கூடிய காணொளி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

இதற்கிடையே, சென்னையில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியை நடிகர் அஜித் தனது குடும்பத்துடன் கண்டுகளித்தார். பின்னர் அவர்களுடன் நடிகர் சிவகார்த்திகேயனும் இணைந்தார்.

குறிப்புச் சொற்கள்