தமிழ், தெலுங்கு திரையுலகுகளில் பிரபலமான நடிகை மேகா ஆகாஷ், இம்மாதம் 22ஆம் தேதியன்று சாய் விஷ்ணு என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டார்.
இதையடுத்து அடுத்த மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
மேகா ஆகாஷ்-சாய் விஷ்ணு திருமண நிச்சயதார்த்தப் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
கடந்த 2019ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானார் மேகா ஆகாஷ்.
தனுஷுடன் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, சிம்புவுடன் ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ போன்ற படங்களில் நடித்திருக்கிறார் இவர். கடைசியாக இவரது நடிப்பில், ‘சபாநாயகன்’, ‘வடக்குப்பட்டி ராமசாமி’, ‘மழை பிடிக்காத மனிதன்’ உள்ளிட்ட படங்கள் வெளியாகின.