தன்னைப் பற்றி ஒருசில தரப்பினர் வேண்டுமென்றே பல்வேறு வதந்திகளைத் தொடர்ந்து பரப்பி வருவதாகச் சாடியுள்ளார் மீனாட்சி சௌத்ரி.
இவரையும் நடிகர் சுஷாந்தையும் இணைத்து காதல் கிசுகிசு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
“எங்கள் இருவருக்கும் இடையே இருப்பது வெறும் நட்புதான். நான் தெலுங்குத் திரையுலகில் அறிமுகமான நாள் முதலே இப்படித்தான் ஏதேனும் ஒரு நடிகருடன் இணைத்து சிலர் மாதந்தோறும் வதந்தி பரப்புகிறார்கள்.
“அவர்களுக்கு எப்போதுமே பரபரப்பான செய்தி தேவைப்படுகிறது. அதற்கு நம் பெயரைப் பயன்படுத்துவார்கள். இவர்களுக்கு யாரும் ஆதரவு அளிக்கக் கூடாது,” என்கிறார் மீனாட்சி சௌத்ரி.

