கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என்று அண்மையில் முடிவெடுத்திருந்த நடிகர் விஜய் சேதுபதி, தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்.
இதற்கான காரணத்தை அவர் கூறும்போது, “ரஜினி மீது கொண்ட அன்பினால் மட்டுமே இதில் நடிக்கிறேன். பல தலைமுறைகளாகத் திரையுலகில் நீடித்து வரும் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ளவும், அவருடன் நேரத்தைச் செலவிடவும் விரும்புகிறேன். இதுவே நான் நடிக்க ஒப்புக்கொண்டதற்குக் காரணம்,” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

