தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ராம்சரண் படத்தில் நடிக்க விஜய்சேதுபதி மறுத்தது ஏன்?

1 mins read
836dc9d0-d97e-4779-b817-7f9ddc847e52
விஜய் சேதுபதி, ராம்சரண். - படம்: ஊடகம்

தெலுங்கு நடிகர் ராம் சரணுடன் இணைந்து நடிக்க மறுத்ததற்கு காரணம் கூறிய விஜய் சேதுபதி.

ஆர்ஆர்ஆர் படத்தைத் தொடர்ந்து ராம்சரண் தற்போது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்து வரும் இந்தப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ராம்சரண் நடிக்கும் அவரது 16வது படம் துவங்க இருக்கிறது. இதை இயக்குநர் புச்சி பாபு சனா என்பவர் இயக்குகிறார். இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகர் விஜய்சேதுபதியை அணுகியபோது அதில் நடிக்க அவர் மறுத்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது.

இத்தனைக்கும் கடந்த 2021ல் தான் அறிமுக இயக்குநராக இயக்கிய உப்பென்னா திரைப்படத்தில் கதாநாயகி கீர்த்தி ஷெட்டியின் தந்தையாக விஜய்சேதுபதியை நடிக்க வைத்தவர் தான் இந்த புச்சி பாபு சனா. ஆனால் ராம்சரண் படத்திலும் விஜய்சேதுபதிக்கு ராம்சரணின் தந்தை கதாபாத்திரத்தையே கொடுப்பதாக இருந்தாராம்.

தொடர்ந்து இதுபோன்று கதாபாத்திரங்களில் நடித்தால் தன்னை மீண்டும் மீண்டும் அதுபோன்ற கதாபாத்திரங்களுக்குத்தான் அணுகுவார்கள் என்பதால் அதை மறுத்துவிட்ட விஜய்சேதுபதி வித்தியாசமான கதாபாத்திரம் என்றால் சொல்லுங்கள் நிச்சயம் நான் நடிப்பேன் என்றும் அவரிடம் கூறிவிட்டாராம்.

இதைத் தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு பதிலாக அந்தக் கதாபாத்திரத்தில் சிவராஜ் குமாரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாவிஜய்