நடிகர் சித்தார்த், விடிந்தும் விடியாமலும் தனது மனைவி காலையில் முதல் வேலையாகச் செய்யும் காரியத்தை பகிர்ந்துள்ளார்.
நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைதரியும் காதலித்து வந்தார்கள். இதையடுத்து காதலை வீட்டில் முறைப்படி சொல்லி செப்டம்பர் 16ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
இருவருக்கும் பழமையான கோவிலில் எளிமையாக திருமணம் நடைபெற்றது.
அப்பொழுது எடுக்கப்பட்ட திருமணப் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பகிரப்படுகின்றன.
இந்த நிலையில் மனைவி பற்றி சித்தார்த் பேசியிருக்கிறார்.
காலையில் முதல் வேலையாக அதிதி ராவ் ஹைதரி என்ன செய்வார் என சித்தார்த்திடம் கேட்கப்பட்டதற்கு, “அவரோ, என்னை எழுப்பிவிடுவார். என் அனுமதி இல்லாமல், என் விருப்பத்திற்கு எதிராக. விருப்பமே இல்லாமல், அய்யோ நாள் துவங்கிவிட்டதே என கண்ணீருடன் எழுவேன். அந்தத் தருணத்தை மகிழ்ச்சியாக அவர் எடுத்துக் கொள்வார். ஒரு குழந்தையின் கையில் இருக்கும் இனிப்பை பறிப்பது போன்று தனது மனைவி அதிதி ரசிப்பார்,” என்று கூறியுள்ளார்.
சித்தார்த் பற்றி அதிதி ராவ் ஹைதரி கூறியதாவது: சித்தார்த் என்னிடம் பொய் சொல்லவே மாட்டார். உண்மையை மட்டுமே பேசுவார். அவர் வேட்டி அணிந்தால் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றார்.
திருமணத்தில் மாறாக வேட்டி, ஜிப்பா அணிந்திருந்தார் சித்தார்த். தென்னிந்திய முறைப்படி நடந்த திருமணத்தில் சேலையில் அழகாக இருந்தார் அதிதி.
தொடர்புடைய செய்திகள்
அதிதி, சித்தார்த்தில் யார் முதலில் ‘Sorry’ சொல்வார்கள் எனக் கேட்டதற்கு, தான்தான் என்றார் அதிதி.
“நான்தான் அதிகம் ‘சாரி’ சொல்வேன் என்றார் சித்தார்த். மேலும் நன்றியும் அதிகம் சொல்வேன் என்கிறார் அவர்.
மேலும் சித்தார்த்துக்கு பார்ட்டிக்குப் போகப் பிடிக்காது என்று அதிதி கூறியுள்ளார்.


