வியக்க வைக்கும் பன்முகத்தன்மை கொண்ட வாழ்விடங்களை தக்கவைத்திருப்பதில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது என்று கூறியிருக்கிறார் ‘வைல்ட் தமிழ்நாடு’ ஆவணப் படத்தின் இயக்குநர்.
சுந்தரம் ஃபாஸ்டனர்ஸ் லிமிடெட் சார்பில் ஆர்த்தி கிருஷ்ணா தயாரிப்பில், நடிகர் அரவிந்த் சாமி குரலில் கல்யாண் வர்மா இயக்கியுள்ள ‘வைல்ட் தமிழ்நாடு’ என்ற ஆவணப்படம் சென்னையில் திரையிடப்பட்டது.
இப்படம் குறித்து இயக்குநர் கல்யாண் வர்மா பேசியபோது, “இந்த ஆவணப்படம் எனது வாழக்கையில் மிக முக்கியமான படங்களில் ஒன்றாக இருக்கும்.
“கலாசாரமும் வனப்பகுதியும் பிரிக்கமுடியாத வகையில் பின்னிப்பிணைந்த ஒரு நிலத்தின் ஆழமான கதையைப் பகிர்வதுதான் என்னுடைய நோக்கம். வியக்க வைக்கும் பன்முகத்தன்மை கொண்ட வாழ்விடங்களைத் தக்கவைத்திருப்பதில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது,” என்றார்.

