தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெற்றி பெறுமா ‘தக் லைஃப்’; பெரும் எதிர்பார்ப்பில் கமல்

1 mins read
9b90af07-2d01-4930-8073-dc63556acff3
‘தக் லைஃப்’ படத்தில் கமலின் தோற்றம். - படம்: ஊடகம்

‘இந்தியன்-2’ படத்தின் தோல்வி கமலை சற்றே அசைத்துப் பார்த்துவிட்டது.

இந்நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் தாம் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளாராம் கமல்.

கடந்த 1980களில் கமலும் மணிரத்னமும் இணைந்து உருவாக்கிய ‘நாயகன்’ படம் இன்றளவும் ரசிக்கும்படியாக உள்ளது.

குண்டர் கும்பல் தொடர்பான இப்படத்தின் கதையை மையப்படுத்தியே ‘தக் லைஃப்’ படத்தை உருவாக்குகிறாராம் மணிரத்னம். இதில் சிம்பு உள்பட பல பெரிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், ஜனவரியில் சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் சகோதரர்கள் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் கமல். இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்க உள்ளது.

கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்