திருமண, காதல் முறிவுகள் காரணமாக பெண்கள் வீட்டுக்குள் முடங்கிவிடக் கூடாது என்கிறார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.
இதுபோன்ற சிக்கல்களை வாழ்வின் முக்கியமான, சிறந்த தருணங்களாக பெண்கள் கருத வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.
“விவாகரத்தும் காதல் முறிவும் வாழ்க்கையின் முடிவல்ல. அவை பெண்களின் வளர்ச்சிக்கு நிச்சயம் உதவும். அவற்றை வளர்ச்சிக்கான முதல் புள்ளி எனக் கருதுங்கள்.
“காலம் மாறிவிட்டது. திருமணத்துக்குப் பிறகு ஒரு தவறான சூழலில் சிக்கிவிட்டதாகக் கருதினீர்கள் எனில், அதைவிட்டு வெளியேறத் தயங்க வேண்டாம்,” என்றும் ஐஸ்வர்யா லட்சுமி மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும் அவரது இந்தக் கருத்துகளுக்கு சமூக ஊடகங்களில் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இப்படிப்பட்ட அறிவுரைகள் யாருக்கும் தேவை இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.