இந்தி திரைப்படங்களில் நடிக்கும்போது படப்பிடிப்புத் தளத்தில் உட்காருவதற்கு, தனக்கு நாற்காலிகூட கிடைக்காது என்று கூறியுள்ளார் நடிகர் துல்கர் சல்மான்.
இந்தித் திரையுலகத்தினர் பிற மொழிக் கலைஞர்களை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை என்றும் அண்மைய ஊடகப்பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இந்திப் படப்பிடிப்புகளுக்கு என்னுடைய நண்பர்கள் சிலரை அழைப்பதுண்டு. அவ்வாறு அவர்கள் வரும்போது உட்கார நாற்காலிகூட கிடைக்காது. வேறு வழியின்றி அவர்களுடன் படப்பிடிப்புத் தளத்தைச் சுற்றி வருவேன். அவ்வளவு ஏன், சில சமயங்களில் நாம் நடித்த காட்சி நன்றாக வந்துள்ளதா என்று எதிரே உள்ள திரையில் பார்க்க அதன் அருகில்கூட செல்ல முடியாது.
“மானிட்டரைச் சுற்றி நிறைய பேர் கூடியிருப்பார்கள். பாலிவுட்டில் மிகப்பெரிய காரில் பல ஆட்களுடன் வந்தால், அவர்தான் பெரிய நட்சத்திரம் என்கிற மனோபாவம் இருக்கிறது. மற்றவர்கள் எல்லாம் அவர்களுக்கு ஒரு பெரிய பொருட்டல்ல,” என்று கூறியுள்ளார் துல்கர் சல்மான்.

