இணைந்து பணியாற்றுவது நீடிக்கும்: ஜி.வி.பிரகாஷ்

1 mins read
a4ea66bd-3169-4b67-b26b-ac2cd9bf738c
ஜி.வி.பிரகாஷ், சைந்தவி. - படம்: ஊடகம்

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும் பாடகி சைந்தவியும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்யப்போவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தனர்.

எனினும், ஜி.வி.பிரகாஷின் இசை நிகழ்ச்சிகளிலும் அவரது இசையிலும் தொடர்ந்து பாடி வருகிறார் சைந்தவி.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஜி.வி.பிரகாஷ், “திருமண வாழ்க்கையில் நீடிக்க முடியாமல் பிரிந்துவிட்ட போதிலும், ஒருவர் மீது ஒருவருக்கு மிகுந்த மரியாதை உள்ளது.

“அதன் காரணமாகவே தொழில் ரீதியாக இணைந்து பணியாற்றி வருகிறோம். எனவே இதே நிலை இனிவரும் நாள்களிலும் நீடிக்கும்,” என்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

இவரது இந்த நிலைப்பாட்டை இசை ரசிகர்கள் ஏராளமானோர் வரவேற்று சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்