உலகின் பணக்கார நடிகர்கள் தரவரிசைப் பட்டியலில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். இதன்மூலம் பிரபல ஹாலிவுட் நடிகர்கள் டாம் குரூஸ், ஜார்ஜ் குளூனி ஆகியோரை ஷாருக்கான் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
இந்தியாவில் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ள ஷாருக்கான், 30 ஆண்டுகளுக்கு மேலாக 90க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பணக்கார நடிகர்கள் பட்டியலை 'வோர்ல்ட் ஆஃப் ஸ்டாடிஸ்டிக்ஸ்' நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அதில் ஜெர்ரி செய்ன்ஃபீல்ட், டைலெர் பெர்ரி, டுவைன் ஜான்சனுக்கு அடுத்தபடியாக ஷாருக்கான் உள்ளார்.
இப்பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் வந்த ஒரே இந்திய நடிகர் ஷாருக்கான். இப்பட்டியலில் இடம்பெற்ற மற்ற நடிகர்களில் டாம் குரூஸ், ஜாக்கி சான், ராபர்ட் டி நிரோ ஆகியோர் அடங்குவர்.
ஷாருக்கானின் நிகர மதிப்பு US$770 மில்லியன் (ரூ.6,306 கோடி) எனக் கூறப்படுகிறது.

