திரைப்படங்களில் சாதியைத் திணிப்பது தவறு என்று நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், குருக்களையாபட்டியைச் சேர்ந்த விஷ்ணு என்ற சிறுவன், தனது கிராமத்திற்கு குடிநீர் வசதி ஏற்படுத்தித் தருமாறு கோரிக்கை வைத்திருந்தார். அந்தச் சிறுவனின் கோரிக்கையை ஏற்ற நடிகர் ராகவா லாரன்ஸ், தனது அறக்கட்டளை மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை அமைத்துக் கொடுத்து இன்று அதனைத் திறந்து வைத்திருக்கிறார்.
இதையடுத்து, ஏராளமானோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லாரன்ஸ், நடிகை நயன்தாராவை ‘சூப்பர் ஸ்டார்’ என்று குறிப்பிடுவதில் தவறில்லை.
“முன்பு இதே பட்டத்தை நடிகை விஜயசாந்திக்கு ரசிகர்கள் அளித்தனர். எனினும், இப்போது எந்தப் பட்டமும் தேவையில்லை என்று சொல்வது நயன்தாராவின் தனிப்பட்ட விருப்பம்.
“அண்மைக் காலமாக தமிழில் சாதி அடிப்படையிலான படங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. திரைத்துறையில் சாதித் திணிப்பு தலைதூக்குவது ஏன் என்று என்னிடம் கேட்கிறார்கள்.
“என்னைப் பொறுத்தவரை திரைப்படங்களில் சாதியைத் திணிப்பது தவறுதான். இது தேவையற்றது,” என்றார் லாரன்ஸ்.

