திகில் படத்தில் மருத்துவர் வேடத்தில் யாஷிகா ஆனந்த்

1 mins read
31100cc2-3069-43e8-a026-4973bfb48fcb
யாஷிகா ஆனந்த். - படம்: ஊடகம்

நடிகை யாஷிகா ஆனந்த் மீண்டும் திகில் படம் ஒன்றில் ஒப்பந்தமாகி உள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத அந்தப் படத்தில் முதன்முறையாக மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.

எம்.ஏ.பாலா இயக்கும் படம் இது. இவர் ஏற்கெனவே ‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’ என்ற படத்தைத் தயாரித்து இயக்கியவர்.

இந்தப் புதிய படத்துக்கு விபின் இசையமைக்க, நிஜ மருத்துவரான ராம் பிரசாத் நாயகனாக நடிக்கிறார். தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

குறிப்புச் சொற்கள்